ETV Bharat / city

அடுக்குமாடி குடியிருப்பில் கார் பார்க்கிங் செய்வதில் பிரச்சனை; ஆணும்,பெண்ணும் தாக்கிக் கொண்ட வீடியோ - கார் பார்க்கிங் செய்வதில் தகராறு

சென்னையை அடுத்த மாங்காடு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கார் பார்க்கிங் பிரச்சனையில் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடிதடி
அடிதடி
author img

By

Published : Jun 27, 2022, 9:54 AM IST

சென்னை: மாங்காடு, பத்மாவதி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நித்யா(37). இவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் பகுதியில் வேறு ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

அது குறித்து கேட்டபோது, கீழ்தளத்தில் வசிக்கும் மோகன் என்பவர் நிறுத்தும்படி சொன்னதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நித்யா அதே குடியிருப்பில் கீழ்தளத்தில் வசிக்கும் மோகனிடம் நேற்று (ஜூன்56) கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மோகன் வீட்டில் இருந்த இரும்பு கதவை வேகமாக திறந்து கொண்டு வெளியே வரும்போது அவரது தாயின் முகத்தில் பட்டதில் லேசான காயம் ஏற்பட்டது.

கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறு

இதனால்,கோபத்தின் உச்சிக்கு சென்ற மோகன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி நித்யாவை அடித்தார். பதிலுக்கு அவரும் செருப்பை கழட்டி அடித்தார்.

இந்த அடிதடி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தன்னுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தோழியைக் கொன்ற நண்பன்... சாக்கு மூட்டையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.