விசாகப்பட்டினத்திலிருந்து இந்திய விமான படை விமானம் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (ஜூன் 29) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் வரவேற்றனர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
நான்கு நாள்கள் பயணமாக சென்னை வந்தடைந்த வெங்கையா நாயுடு ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். நாளை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்விலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் நாளை முன்னிட்டு புத்தக வெளியீட்டு விழா ஒன்றிலும் கலந்துகொள்கிறார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஜூலை 2) சிறப்பு விமானம் மூலம் புறப்படுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு முதன் முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா?'