வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடந்து முடிந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் எட்டாயிரத்து 141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கதிர் ஆனந்த் நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி. சண்முகம் நான்கு லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளும் பெற்றனர். வேலூர் தொகுதியிலும் வெற்றிபெற்று டெல்லியில் திமுக எம்.பி.க்களின் பலம் 24ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டு வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், கே.வி. குப்பம், வாணியம்பாடி என ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. இதில் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஆனால், நடந்துமுடிந்த இந்த இரண்டு பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட தற்போது வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவின் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது.
அதன்படி, ஆம்பூர் இடைத்தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 96 ஆயிரத்து 455 வாக்குகள் ஆகும். ஆனால் இந்தத் தேர்தலில் 17 ஆயிரத்து 84 வாக்குகள் குறைவாக பெற்று அத்தொகுதியில் 79,371 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேசமயம் கடந்த இடைத்தேர்தலில் 58 ஆயிரத்து 688 வாக்குகளைப் பெற்ற அதிமுக இந்த முறை 12 ஆயிரத்து 80 வாக்குகள் அதிகம் பெற்று மொத்தம் 70 ஆயிரத்து 768 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதேபோல், குடியாத்தம் இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 316 வாக்குகளைப் பெற்ற திமுக இம்முறை 22 ஆயிரத்து 429 வாக்குகள் குறைவாக பெற்று மொத்தம் 82 ஆயிரத்து 887 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் கடந்த முறை 78 ஆயிரத்து 155 வாக்குகள் பெற்ற அதிமுக, இந்த முறை 94 ஆயிரத்து 178 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இது இப்படியிருக்க, தற்போது திமுக வசமிருக்கும் அணைக்கட்டுத் தொகுதியில் அதிமுக 88 ஆயிரத்து 770 வாக்குகளும், திமுக 79 ஆயிரத்து 231 வாக்குகளையும் பெற்றுள்ளது. அதேபோல், கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுக 80 ஆயிரத்து 100 வாக்குகளும், திமுக 71 ஆயிரத்து 991 வாக்குகளும் பெற்றுள்ளன.
திமுகவிற்கு கைகொடுத்த வேலூர், வாணியம்பாடி
ஆம்பூர், குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி. குப்பம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுகவிற்கு வாக்குவங்கி சரிந்திருந்தாலும், அதிமுக வசமிருக்கும் வாணியம்பாடியிலும், திமுக வசமிருக்கும் வேலூரும் திமுகவுக்கு கைகொடுத்திருக்கின்றன.
அதன்படி, வாணியம்பாடி பேரவைத் தொகுதியில் திமுக 92 ஆயிரத்து 599 வாக்குகளையும், அதிமுக 70 ஆயிரத்து 248 வாக்குகளையும் பெற்றுள்ளன. (வித்தியாசம் 22 ஆயிரத்து 311). மேலும், வேலூர் தொகுதியில் திமுக 78 ஆயிரத்து 901 வாக்குகளும், அதிமுக 72 ஆயிரத்து 696 வாக்குகளையும் பெற்றுள்ளது. (வித்தியாசம் ஆறாயிரத்து 374).
ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் திமுகவின் வாக்கு வங்கி கடுமையாக சரிந்திருப்பது அக்கட்சியினரைக் கவலையடையச் செய்துள்ளது.
Intro:Body:
வேலூர் நாடாளுமன்றத்தில் உண்மையில் வென்றது யார்?
நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனாலும், அவ்வெற்றி வெற்றியே அல்ல என்றும், அதிமுகவின் தோல்வியே வெற்றி என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன? வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், கே.வி.குப்பம், வாணியம்பாடி.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத்துக்குட்பட்ட
வேலூர் சட்டமன்றத் தொகுதியில்
*திமுக* - 78901
*அதிமுக* - 72626
*வித்தியாசம்* - 6374 வாக்குகள்
பெற்றுள்ளது.
சரி. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது இத்தொகுதியின் நிலை என்ன?
திமுக - 87441, அதிமுக - 61852, பாஜக - 5175, பாமக - 5135.
அதிமுக கூட்டணியான அதிமுக,பாமக, பாஜக வாக்குகளைச் சேர்த்தால் 61852+5175+5135= 72162. கிட்டத்தட்ட அதிமுக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய அதே வாக்குகள். 2016ல் தாங்கள் பெற்ற வாக்குகளோடு
அதிமுக இந்தத்தேர்தலில் பாமக, பாஜக ஆதரவு வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளது. திமுக 2016ல் பெற்ற வாக்குகளைவிட 2019ல் 8504 வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில்
*அதிமுக* - 88770
*திமுக* - 79231
*வித்தியாசம்* - 9539 வாக்குகளைப் பெற்றுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக - 76660, அதிமுக - 68889, பாமக - 24591, தமிழ்மாநில காங்கிரஸ் - 2628, பாஜக 1729 வாக்குகள் பெற்றன.
அதிமுக கூட்டணியிலிருக்கும் பாமக, பாஜக வாக்குகளைச் சேர்த்தால், 2016 கணக்குப்படி அதிமுக கூட்டணி அணைக்கட்டில் பெற்ற வாக்குகள் - 95,209. இதில் சுமார் 88770 வாக்குகளை அதிமுக நடந்து முடிந்த தேர்தலில் பெற்றுள்ளது. கூட்டணி கணக்குப்படி 6,469 வாக்குகளை அதிமுக இழந்துள்ளது.
அதேநேரம் நடந்து முடிந்த தேர்தலில் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளைவிட அணைக்கட்டில் கூடுதலாக சுமார் 2,571 வாக்குகளைப் பெற்றுள்ளது. எனில், அதிமுக - பாமக வாக்குகளை திமுக இங்கும் ஓரளவுக்கு பெற்றிருக்கிறது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில்
*அதிமுக* - 94178
*திமுக* - 82887
*வித்தியாசம்* - 11291 வாக்குகள் பெற்றுள்ளது.
2016 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அதிமுக - 94535, திமுக - 82676, பாமக - 7482, சி.பி.ஐ - 3123 வாக்குகள் பெற்றன.
2016ல் என்ன வாக்குகளை பெற்றதோ கிட்டத்தட்ட அதேவாக்குகளை மீண்டும் திமுக 2019லும் பெற்றுள்ளது. அதேநேரம் 2016ல் 94535 வாக்குகள் பெற்ற அதிமுகவும் அத்தொகுதியில் கணிசமான வாக்குகள் உள்ள பாமக கூட்டணி இருந்தும் மீண்டும் அதேவாக்குகளைப் பெற்றுள்ளது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்
கேவி குப்பம் சட்டமன்றத்தொகுதியில்
*அதிமுக* - 80100
*திமுக* - 71991
*வித்தியாசம்* - 8109 வாக்குகள் பெற்றுள்ளது.
2016 தேர்தலில் அதிமுக 75493, திமுக - 65466, பாமக 12995, பாஜக - 2203, தேமுதிக - 4163.
2016 கணக்கின்படி அதிமுக கூட்டணியின் வாக்குகள் - 88,708. இதில் 80100 வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. கூட்டணி கணக்குப்படி சுனார் 8,608 வாக்குகளை அதிமுக குறைவாக பெற்றுள்ளது. அதேநேரம் 2016ல் பெற்றவாக்குகளைவிட சுமார் 6545 வாக்குகளை இத்தொகுதியில் திமுக அதிகம் பெற்றுள்ளது. எனில், அதிமுக - பாமக வாக்குகள் திமுகவுக்கு வந்துள்ளன.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,
வாணியம்பாடி சட்டமன்றத்தில்
*திமுக* - 92599
*அதிமுக* - 70248
வித்தியாசம் - 22311 வாக்குகளைப் பெற்றுள்ளன.
வாணியம்பாடி சட்டமன்றத்தில், 2016 தேர்தலில் திமுககூட்டணி - 54748, அதிமுக - 69447, பாமக - 9238, பாஜக - 1929 வாக்குகளைப் பெற்றுள்ளன.
2016 கணக்குப்படி அதிமுக + பாமக + பாஜக வாக்குகள் = 80614. இதில் 70248 வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதேநேரம், 2016 தேர்தலில் 54748 வாக்குபெற்ற திமுக கூட்டணி, இந்தத்தேர்தலில் சுமார் 37851 வாக்குகளை இத்தொகுதியில் அதிகம் பெற்றுள்ளது. எனில், அதிமுக - பாமக ஓட்டுக்கள் திமுகவுக்கு வந்துள்ளன.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆம்பூர் சட்டமன்றத்தில் கட்சிகள்
*திமுக* - 79371
*அதிமுக* - 70768
வித்தியாசம் - 8603 வாக்குகள் பெற்றுள்ளன.
2016 தேர்தலின்படி, திமுக கூட்டணி
- 50825, அதிமுக - 78977, பாமக - 4629, பாஜக - 5729 வாக்குகள் பெற்றுள்ளன.
2016 கணக்குப்படி அதிமுக கூட்டணியின் வாக்குகள் - 89335. இதில், 70768 வாக்குகளை மட்டுமே அதிமுக தற்போது பெற்றுள்ளது. அதேநேரம் 2016
தேர்தலைவிட சுமார் 28,526 வாக்குகளை திமுக அதிகம் பெற்றுள்ளது. எனில் அதிமுக - பாமக ஓட்டுக்கள் திமுகவுக்கு வந்துள்ளன.
எனவே, 2016ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிட்டால், 2019ல் அணைக்கட்டில் 2571 வாக்குகளையும், வாணியம்பாடியில் 37,851 வாக்குகளையும், கே.வி.குப்பத்தில் 6545 வாக்குகளையும், ஆம்பூரில் 28,526 வாக்குகளையும் பெற்று 4 சட்டமன்றத் தொகுதியில் திமுக 2016ஐ ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
வேலூர் சட்டமன்றத் தொகுதியில், 2016ல் பெற்றதைவிட குறைவான வாக்குகளை திமுக பெற்றுள்ளது. அங்கேயும் பாமக, பாஜக என கணிசமான வாக்குவங்கி கூட்டணி உள்ள அதிமுகவைவிட திமுகவே சுமார் 6374 வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. எனில், வேலூர் நாடாளுமன்றத்துக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக 4 சட்டமன்றத்தொகுதிகளில் தனது வாக்குவங்கியை அதிகப்படுத்தியுள்ளது. ஒன்றில் இன்னமும் அதிமுக கூட்டணியைவிட வலுவானதாகவே உள்ளது.
குடியாத்தத்தில் திமுக, அதிமுக இரண்டுமே 2016ல் பெற்ற வாக்குகளையே மீண்டும் பெற்றுள்ளன.
பாமக, பாஜக கூட்டணி இருந்தும், மத்திய, மாநில ஆட்சியிருந்தும், தனது சொந்த வாக்குகளை அதிமுக திமுகவிடம் இழந்துள்ளது. தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாகவும், தனித்தே 45% வாக்குகளை பெறும் அளவுக்கான கட்சியாகவும் திமுக உயர்ந்துள்ளது.
குறிப்பு: 2016 ல் இருந்த மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக, தாமக, மதிமுக, விசிக, சி.பி.ஐ, சி.பி.எம். இருந்தன. இவற்றில் அதிக வாக்குகளைக் கொண்ட கட்சிகள் தேமுதிக, தாமக. இவை இரண்டும் அதிமுக கூட்டணியில் உள்ளன. மற்றவை திமுக கூட்டணியில் உள்ளன. என்றாலும், அங்கு பெற்ற வாக்குகள் 6 கட்சிக்கும் பொது என்பதால் அக்கட்சிகள் பெற்ற வாக்குகள் இக்கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
- விவேக் கணநாதன்
Conclusion: