சென்னை: நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
வழக்குகளைத் திரும்பப் பெறுக
'சமூக நீதியாளர்களின் கலந்துரையாடல்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்வைத்து பேசிய திருமாவளவன், "தமிழ்நாடு அரசு நீட் தேர்வு தொடர்பாக அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை எதிர்த்து பாஜக தொடுத்துள்ள வழக்கில், எதிர் தரப்பாக இணைத்துக்கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நீட் கூடாது என வாதிடும்.
வழக்குகள் வாபஸ்
அதே நேரத்தில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்