ETV Bharat / city

லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் அவரது உதவியாளருடன் கைது! - உதவியாளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையால் கைது

தாம்பரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் அவரது உதவியாளருடன் கைது!

author img

By

Published : Feb 18, 2022, 8:07 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் பாபு. இவரது உதவியாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்களிடம் குன்றத்துார் வருவாய் ஆய்வாளரிடமும் தனது நிலத்துக்கான தடையில்லா சான்றிதழ் பெற்றுக் கொடுக்குமாறு சென்னையைச் சேர்ந்த, ஒருவர் சில தினங்களுக்கு முன் கேட்டுள்ளார்.

அந்த நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தர 20,000 ரூபாய் வரை சுரேஷ் லஞ்சம் கேட்டு, இறுதியில் 18,000 ரூபாய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.

பின்னர் காவல் துறையினரின் அறிவுரையின்படி, நேற்று (பிப். 17) மாலை, சுரேஷின் வங்கிக் கணக்கிற்குக் கூகுள்-பே வாயிலாக, பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சுரேஷ் மற்றும் பாபு இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீண்டாமை? தீட்சிதர்கள் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.