செங்கல்பட்டு: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உயிரியல் பூங்காவும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கரோனா தொற்றின் மூன்றாவது அலை 'ஒமைக்ரான்' என்ற பெயரில் பரவி வருகிறது. இதில் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நாளை(ஜனவரி 17) முதல் ஜனவரி 31 வரை பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் கரோனா தொற்றின் பரவல் மட்டுப்படுவதைப் பொறுத்து, பூங்கா திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை கரோனா நிலவரம் - மாநகராட்சி தகவல் வெளியீடு