ETV Bharat / city

’முல்லைப் பெரியாறு தென் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீர்’ - வைகோ - Mullai periyar

கேரள அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தவறான பரப்புரையை மேற்கொண்டு உள்ளனர் என்றும், முல்லைப் பெரியாறு தென் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீர் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ
author img

By

Published : Oct 30, 2021, 2:20 PM IST

மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2014ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மின்சாரம் நிறுத்தம்

கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அப்போது 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மேலும், மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு படகு பயன்படுத்த கேரள அரசு அனுமதிக்கவில்லை. 20 ஆண்டு காலமாக முல்லைப் பெரியாறில் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

யானை, கரடி, புலி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வரும் இடத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அலுவலக அணைக்கட்டில் குடியிருப்பவர்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு மும்முனை மின்சாரம் தரப்பட வேண்டும்.

தென் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரம்

அனைத்து அலுவலர்களும் அணைக்கட்டில் பணிபுரியும் ஊழியர்களும் காய்கறி, மருந்து, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு குமுளி, தேக்கடிக்கு தாராளமாகச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாடு அலுவலர்கள், பத்திரிகை ஊடக அலுவலர்கள் அணைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

வல்லக் கடவு பாதையை சரிசெய்து தர வேண்டும். பேபி அணையை வலுப்படுத்த இடையூறு செய்யக் கூடாது. முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தண்ணீரின் ஒவ்வொரு சொட்டும் தென் தமிழ்நாடு மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீராகும்.

கேரள் கட்சிகளின் தவறான பிரச்சாரம்

ஆகவே 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர், கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்குத்தான் செல்லும். 555 அடி உயரம் உள்ள இடுக்கி அணையின் நீர் மட்டத்தை, மழைக் காலங்களில் அபாய எச்சரிக்கை விடப்பட்டவுடன், நீர்மட்டத்தை 455 அடி என, 100 அடி குறைக்க வேண்டும்.

கேரள அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தவறான பரப்புரையை மேற்கொண்டு உள்ளனர். இரண்டு மாநில அரசுகளும் நேச உறவை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். கேரள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு மக்கள் செய்துதர தயாராக உள்ளனர். இரண்டு மாநில அரசுகளும் நல்லுறவை வலுப்படுத்த வேண்டியது இன்றைய முன்னணிக் கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.