ETV Bharat / city

'திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாட்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படும்'

author img

By

Published : Jan 10, 2021, 4:49 PM IST

சென்னை: இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாட்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ - பொள்ளாட்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படும்

திமுக தலைமையில் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என வைகோ தெரிவித்தார்.

மதிமுகவின் தேர்தல் அறிக்கை

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று (ஜன.10) நடைபெற்றது. இக்கூட்டம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு கடந்த ஒரு மாத காலமாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பரிந்துரைகள் அனுப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதி முடிவை எடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து திமுக சார்பாக நடைபெற போராட்டம்

மேலும், வேளாண், பாதுகாப்பு, தொழில், பெண்கள் நலன் உரிமை, மக்கள் நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தல் அறிக்கை தயாரானதும் கூட்டணி தலைவரை சந்தித்து அதனை வெளியிட உள்ளதாக தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பாணை வந்ததும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்த பிறகு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
பொள்ளாட்சி கைது: திமுகவின் வெற்றி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவர்

மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போரட்டம் நடத்த சென்ற கனிமொழியை தடுத்து நிறுத்தியது அக்கிரமான செயல் என்றும் அவருடைய போராட்டம் நியாயமானது என்றார். விசாரனை மேற்கொண்டு 2 ஆண்டுகள் கழித்த பிறகு குற்றவாளிகளை கைது செய்தது, திமுகவின் தொடர் போராட்டத்தின் காரணமாக இது நடந்துள்ளதாகவும், அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகள் இதன் திரைமறைவில் இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

போராட்டம் நடத்த சென்ற கனிமொழி தடுத்து நிறுத்தம்!

ஆளும் கட்சியின் மிக முக்கிய புள்ளி

ஆளுகின்ற கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இதன் பின்னணியில் உள்ளனர். இந்தியாவையே இந்த நிகழ்வு உலுக்கி உள்ளதாகவும், சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு யார் இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களை விசாரணை கூண்டில் நிறுத்தக்கோரிதான் கனிமொழி போராட்டம் நடத்தி உள்ளதாக தெரிவித்தார்.

போலீசாரின் செயலை கண்டித்து சாலையில் அமர்ந்து கனிமொழி போராட்டம்

இந்த மாதிரியான போராட்டங்களை எல்லாம் தடுத்து நிறுத்தலாம் என்று காவல்துறையினரை பயன்படுத்துகின்றனர். இன்னும் 4 மாதங்களில் இந்த ஆட்சி அகலப்போகிறது, திமுக ஆட்சி மலரப்போகிறது. அப்போது எந்த குற்றவாளியும் தப்பமுடியாது" என்றார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - போராட்டம் நடத்த சென்ற கனிமொழி தடுத்து நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.