ETV Bharat / city

”மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வேண்டும்” - கௌதமன் வலியுறுத்தல்

author img

By

Published : Sep 21, 2019, 12:04 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு உடனடியாக மண்ணின் மைந்தர்களுக்கு 90 விழுக்காடு வேலைவாய்ப்பு என்று சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

gowthaman

சென்னை விமான நிலையத்தில் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய அரசு தமிழ்நாட்டில் உரிமைகளை மத்திய அரசு அடித்துக் கொண்டிருக்கிறது. எதையுமே எதிர்க்காமலும், கேள்வி கேட்காமலும் தமிழரின் உரிமையும் தமிழ் நிலத்தின் உரிமையைப் பாதித்தாலும் பேசாமல் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு உள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே தேர்வில் 90% வடமாநில மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில் தமிழர்கள் வெறும் 10க்கும் குறைவாகத் தான் உள்ளனர். இதை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதேபோல் திருச்சி பொன்மலை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற தேர்விலும் 300 பேர் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அண்ணா அவர்கள் போராடி தமிழ்நாடு என்ற பெயரை வைத்தார். நீங்கள் வேண்டுமானால் பாஜகவுக்கு அடிமை நாடு எனப் பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்.

தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ கௌதமன் பேட்டி

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ இல்லத்திற்கு தமிழ்நாடு அரசு சென்று அரசின் சார்பில் அவர்களைப் பார்த்து முறையான இழப்பீடு வழங்க வேண்டும். இனியாவது அரசு வேடிக்கை பாராமல் அந்த குடும்பத்தினருக்கு பெரும் நிதியை வழங்க வேண்டும். மேலும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

Intro:சென்னை விமான நிலையத்தில் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன்
செய்தியாளர்களை சந்தித்தார்.Body:சென்னை விமான நிலையத்தில் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன்
செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய அரசு தமிழ்நாட்டில் உரிமைகளை மத்திய அரசு அடித்துக் கொண்டிருக்கிறது எதையுமே எதிர்க்காமல் கேள்வியும் கேட்காமல் தமிழரின் உரிமையும் தமிழ் நிலத்தின் உரிமையை பாதித்தாலும் பேசாமல் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து கண்டு காணாமல் தமிழக அரசு உள்ளது

தமிழகத்தில் மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே தேர்வில்90% வடமாநில மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்அதில் தமிழர்கள் வெரும் 10ககும் குறைவாக தான் உள்ளனர் இதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

இதேபோல் திருச்சியில் நடைபெற்ற பொன்மலை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற தேர்விலும் 300 பேர் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதை வேடிக்கை பார்க்கத்தான் தமிழக அரசு உள்ளதா இதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டனர் என கேள்வி எழுப்பினார்

அண்ணா அவர்கள் போராடி தமிழ்நாடு என்ற பெயரை வைத்தார் நீங்கள் வேண்டுமானாலும்.
பி,ஜே,பி,க்கு அடிமை நாடு என பெயர் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் காட்டமாக தெரிவித்தார்..

யாருக்காக இந்த அரசு மக்களுக்காக தானா தமிழக அரசு உடனடியாக மண்ணின் மைந்தர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு என்று சட்டம் இயற்ற வேண்டும்.

இல்லையென்றால் தமிழர்களுக்கான வேலை வேண்டி ஒரு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்..

ரஜினிகாந்த் அவர்கள் குரல் கொடுத்து தான் அமித்ஷா அவர்கள் தனது கருத்தை பின்வாங்கினர் என்றால் வேடிக்கையாக இருக்கிறது....

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ இல்லத்திற்கு தமிழகஅரசு சென்று அரசின் சார்பில் அவர்களைப் பார்த்து முறையான இழப்பீடு வழங்க வேண்டும் இனியாவது அரசு வேடிக்கை பாராமல் அந்த குடும்பத்திர்கு பெரும் நிதியை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

மேலும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
மேலும் பேனரை பிரிண்ட் செய்த நபர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்றும் பேனர் வைக்க செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை அவர் அதிமுக சார்ந்தவர்களாக இருப்பதால் கைது செய்யவில்லை என்றும்

பேனர் விவகாரத்தில் பல தலைவர்கள் அறிக்கை விட்டனர் ஆனால் எநத்தனைபேர் பேனர் வைத்தால் எங்கள் மீது வழக்கு போடுங்கள் என்று எந்த தலைவர்கள் கூறுகிறார்களோ அவர்கள் தான் இந்த பேனர் விவாகரத்துக்கு ஒரு முடிவு கொண்டுவரப்படும்

கட்டவுட் கலாச்சாரத்தில் அரசியலில் உள்ள தலைவர்களுக்கு 50 சதவீதம் பொருந்தும் 50% சினிமாவில் உச்சத்தில் உள்ள கதாநாயகர்கள் அது பொருந்தும்

மேலும் மின்சாரத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் சமீபத்தில் மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் சென்று அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் இதற்கான அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு சரியான தீர்வை அமைச்சர் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டுவிட்டு பொறுப்பான வேலைகளை அதிகாரிகள் அமைச்சர்கள் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.