நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமாலும் ஆக்ஸிஜன் வசதி கிடைக்கமாலும் கரோனா நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசி பெறுவதற்கு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்காக பொதுமக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டடது. இதனை தடுக்கும் விதமாக தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை பெற்றுக்கொள்ளாலம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் படுக்கை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அதைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் [ஆக்ஸிஜன் | ICU] காலியாக உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள "FindABed" செயலியைப் பயன்படுத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்தச் செயலி உங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளைக் காண்பிக்கும் என்றும் கூறியுள்ளது. இந்தச் செயலியை பதிவிறக்கும் செய்யவும் அதை பயன்படுத்தும் முறை குறித்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
Android : https://play.google.com/store/apps/details?id=com.hope3.findabed
"FindABed" என்பது என்ன?
https://www.youtube.com/watch?v=j6pTv_lYMDE&t=1s