தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறையின் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 23 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 110/11 கி.வோ தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையத்தை, காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு, தருமபுரி, கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், 42 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்கள், சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 56 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான புதிய தலைமை அலுவலகக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரூ.21 கோடி மதிப்பீட்டிலான விளையாட்டு கட்டமைப்புகள் திறப்பு!