சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு சமூக பன்முகத்தன்மையை நிச்சயம் நிலைநாட்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் சமூக பன்முகத்தன்மை கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு இன்று பதில் கடிதம் அனுப்பியுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதேபோல் உச்ச நீதிமன்ற நீதிபதியை பரிந்துரை செய்யும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அனைத்துப் பிரிவு மக்களையும், பெண்களையும் கருத்திற்கொண்டு சமூக பன்முகத்தன்மையை நிலைநாட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.