ETV Bharat / city

பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு - நடந்தது என்ன? - பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு

பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது எப்படி? என கைதானவர் அளித்த சுவாரஸ்யத் தகவலைக் காணலாம்.

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது எப்படி

author img

By

Published : Feb 10, 2022, 8:39 PM IST

சென்னை: தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ளது பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயம்.

இன்று (10.02.2022) அதிகாலை 1.20 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார். காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடியுள்ளார்.

தகவலறிந்து விரைந்த மாம்பலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடயங்களைச் சேகரித்தனர். இதனையடுத்து தியாகராயநகர் காவல் துணைஆணையர் ஹரி கிரண் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது பணியில் இருந்த காவலரிடம் விசாரணை நடத்தினார்.

சரித்திரப்பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தின் நீட் எதிர்ப்பு மனநிலை

அதன்பின் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் பதிவான அடையாளத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்ற கருக்கா வினோத் தான், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது என காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர்.

கைதான ரவுடி கருக்கா வினோத் நந்தனம் எஸ்.எம்.நகரில் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பாக பாஜக-வின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

பெட்ரோலைத் திருடி... தயாரிக்கப்பட்ட பெட்ரோல் குண்டு

முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும், இவர் இவ்வாறு பொது பிரச்னையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இதனை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரவுடி கருக்கா வினோத் தான் வசிக்கும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் இருந்து, பெட்ரோலைத் திருடி வந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டு மீதம் இருந்த பெட்ரோலை கருக்கா வினோத், நந்தனம் எஸ்.எம். நகரில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் அருகில் மறைத்து இருந்தது தெரிந்தது. அதனை மாம்பலம் காவல் துறையினர் கைப்பற்றினர்.

தொடர் விசாரணையில், கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி. இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன.

பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு

ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு சென்னை தியாகராயநகர் - தெற்கு போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டை வீசியதும், 2017ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டை வீசிய சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைதான வினோத்தை நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தப்படுத்தும் பணியில் மாம்பலம் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாமை வீசிவிட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கருக்கா வினோத்

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் காவல்துறையிடம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில், நள்ளிரவில் கருக்கா வினோத் தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு நடந்தே வந்துள்ளார். தெருவின் ஒரு முனையில் மட்டுமே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் தெருக்குள் நுழைந்த கருக்கா வினோத் பாஜக மாநிலத் தலைமை அலுவலக வாசலுக்கு வந்து, ஏற்கெனவே பற்ற வைத்து இருந்த பெட்ரோல் குண்டை வீசி உள்ளதாகவும், சத்தம் கேட்டு அங்கு இருந்த காவல் துறையினர் ஓடி வந்த போது மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை கருக்கா வினோத் வீசி விட்டு தப்பியதும் விசாரணையில் தெரிய வந்தது.

பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு கருக்கா வினோத் போதையிலேயே நடந்து சென்று தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு உதவி ஆய்வாளரைச் சந்திக்க வேண்டும் என குடிபோதையில் பேசி உள்ளார். குடிபோதையில் ஏதோ உளறுகிறார் என நினைத்து கண்டித்து காவல் துறையினர் அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.

நீட் பற்றி எனக்கு நன்கு தெரியும்

இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலம் தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் பரவியது. சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அதில் இருந்தது கருக்கா வினோத் என்பதனை காவல் துறையினர் கண்டறிந்தனர்.

வினோத் எங்கே இருக்கிறார் என காவல் துறையினர் தேடியபோது எஸ்.எம். நகரில் சகோதரர் வீட்டில் இருப்பதை அறிந்து காவல் துறையினர் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், நீட் தேர்வு குறித்து என்ன தெரியும் என காவலர் கேட்டதற்கு 3ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், ஆனால் தினமும் பேப்பர் படிப்பதால் தனக்கு நீட் பற்றி நன்கு தெரியும் எனவும் காவலரிடம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவத்தையடுத்து பாஜக மாநில அலுவலகத்திற்கு காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேவராட்டம் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.