இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை (நவ. 26) யுஜிசி-நெட் தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட யுஜிசி-நெட் (கணித அறிவியல் மற்றும் வேதியியல் அறிவியல்) 2020 தேர்வானது மேலதிக அறிவிப்பு வரும்வரை ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி குறித்து www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்ய பணியாளர்கள் தயார்