ETV Bharat / city

தேர்தலில் இளைஞரணிக்கு அதிக இடம் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை - திமுக பொதுக்குழு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர் அணியினருக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்று திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார்.

udhayanithi
udhayanithi
author img

By

Published : Sep 9, 2020, 7:54 PM IST

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் முறைப்படி அறிவிக்கப்பட்டனர். மேலும், துணைப் பொதுச்செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்களை வாழ்த்தி கட்சியின் மூத்த, முக்கிய நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து பேசிய திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ”பொதுக்குழுவையே ’ஜூம் செயலி மூலம் நடத்தி ஸ்டாலின் சாதனை நடத்தியுள்ளார். இதற்காக ஜூம் நிறுவனம் ஸ்டாலினுக்கு ராயல்டி தர வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் அதிகமான பணிகள் இளைஞரணிக்கு காத்திருக்கிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் சூழலில் எந்த போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கும் இளைஞரணி தயாராக உள்ளது. எனவே, பேரவைத் தேர்தலில் இளைஞர் அணியை சேர்ந்தவர்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்“ என்று கூறினார்.

தேர்தலில் இளைஞரணிக்கு அதிக இடம் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

திமுக பொதுக்குழுவில் உதயநிதி ஸ்டாலின் பேசுவது இதுவே முதல்முறையாகும். கடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’திமுக பொதுக்குழுவில் பில்டப்’ - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.