சென்னை: நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக் இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் சென்னை வடபழனி சிமஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க காவல் துறையின் மரியாதையோடு மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவரின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.
அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "அண்ணன் விவேக் அவர்களின் உடலுக்கு மரியாதை செய்து இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டேன். அண்ணன் அவர்கள் இவ்வளவு சீக்கிரம் நம்மை பிரிந்திருக்க கூடாது. சமூகத்தின் மீதான தன் அக்கறையை வார்த்தைகளோடு நிறுத்தாமல் செயலிலும் நிகழ்த்திகாட்டிய அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்." என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தகனம்செய்யப்பட்ட விவேக்கின் உடல்