ETV Bharat / city

"வீட்டு வாசலைக்கூட தாண்டாத அமைச்சருக்கும் கரோனா... இன்னும் சமூக பரவல் இல்லையா?" - உதயநிதி காட்டம்

author img

By

Published : Jul 10, 2020, 6:05 PM IST

சென்னை: வீட்டு வாசலைக்கூட தாண்டாத அமைச்சர்களுக்கும் கோவிட்-19 தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

Udhay
Udhay

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

டெல்லியில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவிக்கிறது. அதேபோல கோவாவிலும் கரோனா சமூக பரவலாக மாறிவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இருப்பினும், கரோனா பரவல் சமூக பரவலாக மாறிவிட்டதாக இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டிலும் கோவிட்-19 சமூக பரவலாக மாறிவிட்டது என்ற சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றனர். இருப்பினும், "தமிழ்நாட்டில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை, ஆனால் பரவலாக சமூகத்தில் உள்ளது" என்றே எதிர் தரப்பினர் பதிலளித்துவருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் கரோனா நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின்படி அரசு அலுவலர்கள் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன்.

ஆனால் அதைக் கேட்காமல், திமுக நிர்வாகிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிவாரணப் பணிகளைச் செய்தனர். அதில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சட்டப்பேரவை உறுப்பினர் கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றாததால் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை இழந்துள்ளோம்" என்று கூறியிருந்தார்.

முதலமைச்சரின் இந்தக் கருத்துக்கு அப்போதே ஜெ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் பதிலளித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர்கள் கே. பி. அன்பழகன், தங்கமணி ஆகியோரைத் தொடர்ந்து இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், "நிவாரணம் வழங்கியதாலே அண்ணன் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்’ என அவரின் தியாகத்தை அடிமை ‘அசிங்க’ கூஜாக்கள் கொச்சைப்படுத்தினர். ஆனால் வீட்டு வாசலைக்கூட தாண்டாத அமைச்சர்கள், அதிமுக MLAக்களை கொரோனா தொற்றிவருகிறது. அந்த வரிசையில் இன்று ஓர் அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

  • இவர்கள் அனைவரும் உடல்நலன் தேறி வரவேண்டும் என வாழ்த்தும் அதேசமயம், ‘எல்லோருக்கும் வந்தால்தான் சமூக பரவல்’ என வாய்க்கு வந்ததெல்லாம் அறிவியல் என அவிழ்த்துவிடும் @CMOTamilNadu அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்.

    — Udhay (@Udhaystalin) July 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இவர்கள் அனைவரும் உடல்நலன் தேறி வரவேண்டும் என வாழ்த்தும் அதேசமயம், ‘எல்லோருக்கும் வந்தால்தான் சமூக பரவல்’ என வாய்க்கு வந்ததெல்லாம் அறிவியல் என அவிழ்த்துவிடும் @CMOTamilNadu அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: கட்டைவிரல்கள் கிடைத்திடாது, கலைஞர் சொன்னது போல் பட்டைதான் உரியும் - உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.