திருவொற்றியூர் வடக்கு மாடவீதி கிராம தெருவில் விரேந்தர் பால் என்பவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்திவருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று (டிச. 28) மாலை வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது மூன்று இளைஞர்கள் பானிபூரியை சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றபோது, விரேந்தர் பணம் கேட்டுள்ளார். பணம் கேட்டதால் குடிபோதையில் மூவரும் ஆத்திரத்தில் வியாபாரியை மிரட்டியதுடன், கையில் வைத்திருந்த கத்தியால் கடைக்காரரை கழுத்தில் வெட்டியுள்ளனர்.
விரேந்தர் பால் கூச்சலிடவே அங்கிருந்து மூன்று பேரும் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் விரைந்துவந்த திருவொற்றியூர் காவல் துறையினர் வெட்டுப்பட்ட விரேந்தர் பாலை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்த ராஜ்குமார், தியாகராஜன் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில் சோபன் என்பவர் மட்டும் தலைமறைவாகி உள்ளதால் அவரையும் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: எடை குறைந்த செயற்கைக்கோள்களை உருவாக்கிய மாணவருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு