ETV Bharat / city

சென்னையில் ஓபியம் போதைப்பொருள் விற்பனை: இருவருக்கு சிறை - சென்னையில் போதை பொருள் விற்பனை

சென்னையில் ஓபியம் எனும் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 20, 2022, 5:32 PM IST

சென்னை: வீடொன்றில் ஓபியம் என்ற போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் 600 கிராம் எடையுள்ள ஓபியமை பறிமுதல் செய்தனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருவல்லிக்கேணி சாமி தெருவில் உள்ள வீடு ஒன்றில் இன்று (செப்.20) சோதனையிட்டதில் 600 கிராம் ஓபியம் என்னும் பேஸ்ட் வடிவிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அதை வைத்திருந்த சோகன் லால்(58), சுரேஷ் குமார்(38) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், சோகன் லால் பான் ஷாப் நடத்தி வருவதும், சுரேஷ் குமார் கவரிங் நகை விற்பனை செய்து வரும் தொழில் மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது. சோகன் லால் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஓபியம் எனும் போதைப்பொருள் செடியை ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வந்து, அதை வீட்டிலேயே அறைத்து, விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக, ஓபியம் போதைப்பொருளை ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சில மார்வாடி திருமண நிகழ்ச்சிகளில் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஒரு பொட்டலம் ரூ.3000 முதல் 3500 வரை விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இவர்களிடம் இருந்து ரூ.60,000 மதிப்புள்ள ஓபியம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் கஞ்சா கேக் விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இன்று ஓபியம் என்னும் போதைப்பொருட்கள் விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு, சென்னையில் புதுவிதமான போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஓபியம் எனும் போதை பொருள்
பறிமுதல் செய்யப்பட்ட ஓபியம் எனும் போதைப்பொருள்

இதையும் படிங்க: உணவு ஆர்டர் செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஊழியர்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.