ETV Bharat / city

பொதுத்துறை வங்கியில் ரூ.74 லட்சம் மோசடி... ஆடம்பர வாழ்க்கை வாழ ஊழியர்கள் நூதனம்... - Rs 74 lakh embezzling PNB

சென்னையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கீழ் செயல்படும் வீட்டுக்கடன் நிதி நிறுவனத்தில், ஊழியர்களே வாடிக்கையாளரின் வைப்பு தொகை ரூ.74 லட்சத்தை கையாடல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two arrested for embezzling Rs 74 lakh from PNB Housing Finance chennai

author img

By

Published : Apr 20, 2022, 11:30 AM IST

சென்னை ராயப்பேட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கீழ் செயல்படும் வீட்டுக்கடன் நிதி நிறுவன கிளை அலுவலகம் (PNB Housing Finance) இயங்கி வருகிறது. இந்த கிளையில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மாயா அரவிந்தாக்‌ஷன் (80) 2017ஆம் ஆண்டு 33 லட்சத்து 31 ஆயிரத்து 140 ரூபாய், 2020ஆம் ஆண்டு 41 லட்சத்து 61 ஆயிரத்து 880 ரூபாய் என்று இரண்டு நிரந்தர வைப்பு நிதியை (Fixed Deposit) செலுத்தினார்.

இதையடுத்து 2021ஆம் ஆண்டு வயது முதிர்வால் காலமானார். இதனையறிந்த அமெரிக்காவிலிருக்கும் அவரது மகன் சந்திரசேகர் சென்னைக்கு திரும்பி, இறுதி சடங்குகளை செய்துமுடித்தார். அப்போது அவருக்கு தனியார் வங்கியிலிருந்து பாஸ்-புக் உள்ளிட்ட ஆவணங்கள் கொரியரில் வந்தன. அந்த ஆவணங்கள் மூலம், அரவிந்தாக்‌ஷன் நிதி நிறுவனத்தில் செலுத்திய 74 லட்சம் ரூபாய், தனது தாயர் வங்கி கணக்கு மாற்றப்பட்டு, எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தாயாரிடம் கேட்ட சந்தரசேகர், அவருக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்பதை உறுதி செய்தார். இதையடுத்து பணம் மாற்றப்பட்ட தனியார் வங்கியை அணுகி, விவரம் கேட்டுள்ளார். அப்போது வங்கித் தரப்பில், சம்பந்தப்பட்ட நிதி நிறுவன கிளையின் நிரந்தர வைப்புத்தொகை பிரிவு மேலாளர் ராஜாசுந்தர், மக்கள் தொடர்பு மேலாளர் ஹக்கீம் இருவரும், 74 லட்சம் ரூபாயை எடுத்தாக தெரிவிக்கப்பட்டது.

இதைக்கோட்ட சந்தரசேகர் மோசடி நடந்திருப்பதை உறுதி செய்து, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிதி நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஊழியர்கள் மூலம் பண மோசடி நடந்துள்ளது. இதற்கும் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை. அவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனிடையே இருவரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று (ஏப். 19) இருவரும் புழல் மற்றும் வியாசர்பாடியில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜா சுந்தர், ஹக்கீம் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். நிதி நிறுவனத்திலும் சேர்ந்தே பணியாற்றி வந்தனர். இதில் ராஜா சுந்தர் ஆடம்பரமாக வாழப் பழகியவர் என்பதால் அதிகமாக கடன் வாங்கி வாழ்க்கை நடத்தினார். இதனால் ஏற்பட்ட கடனை ஹக்கீமின் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து அடைத்தார். இதனால் அவர்களுக்கு மேலும் கடன் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரவிந்தாக்‌ஷன் நிரந்தர வைப்பு நிதியை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. இதற்காக அமெரிக்காவில் இருந்த அரவிந்தாக்‌ஷனின் மனைவி மாயாவை தொடர்பு கொண்டு, வைப்பு நிதியை புதுப்பிக்க வேண்டும் என்று பொய்க்கூறி, வங்கி தகவல்களை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.13 லட்சம் மோசடி... ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.