ETV Bharat / city

29 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்? - அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டில் 29 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

university
university
author img

By

Published : Mar 9, 2020, 2:58 PM IST

இந்தியா முழுவதும் தொழில்படிப்புகளை வழங்கிவரும் கல்வி நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சேர்க்கை அனுமதியை ஆண்டுதோறும் பெற வேண்டும்.

கடந்தாண்டு அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என 577 கல்லூரிகள் இருந்தன. இவைகளுக்கான அனுமதி கொடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கும் குழு ஆய்வினை மேற்கொண்டது. அப்போது 92 பொறியியல் கல்லூரிகள் போதுமான கட்டமைப்பு இல்லாமல் இருந்ததால், மாணவர் சேர்க்கை அனுமதி எண்ணிக்கை குறைத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதில் தற்போது இயங்கிவரும் 542 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டதால் நான்கு பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றிவிட்டு அந்தக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். கல்லூரிகளில் மாணவர்கள் இல்லாததால் அந்த 11 கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மேலும் 18 கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அக்கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றிய பின்னர், அதனை மூடுவதற்கும் அனுமதி வழங்கப்படும். எனவே வரும் கல்வியாண்டில் 29 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும், அங்கீகாரம் வழங்குவதற்குரிய ஆய்வுசெய்யும் குழுவில் 7000க்கும் மேற்பட்ட ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு கல்லூரிக்கு ஐந்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீதம் 2500-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆய்வில், உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் நியமனம் போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டால், கல்லூரியில் மாணவர் சேர்க்கை அனுமதி எண்ணிக்கையை குறைக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மெட்ராஸ் ஐஐடியை தேடிவந்த ரோல்ஸ் ராய்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.