ETV Bharat / city

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் செப்.13இல் வெளியீடு - துணைத்தேர்வு முடிவுகள்

பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

a
a
author img

By

Published : Sep 10, 2021, 8:08 AM IST

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் எனவும், துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் அரசு உத்தரவின்படி தேர்ச்சிபெற்றதற்கான மதிப்பெண்கள் சான்றிதழும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

இவர்களுக்கு அனைத்துத் தேர்வு முடிவினை வரும் 13ஆம் தேதி காலை 11 மணிமுதல் தேர்வுத் துறை இணையதளத்திலிருந்து அவர்களின் தேர்வு எண், பிறந்த தேதியைப் பதிவுசெய்து ஆன்லைன் மூலம் மதிப்பெண் பட்டியலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம்

மேலும், அரசு உத்தரவின்படி பன்னிரெண்டாம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்குத் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அவர்களின் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

அரசு தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவுசெய்து மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

பன்னிரெண்டாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்குச் சென்று வரும் 15, 16 ஆகிய தேதிகளில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் மாணவர்கள் மோதலை தடுக்க வாட்ஸ்அப் குழு அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.