ETV Bharat / city

அமமுகவின் எதிர்காலம்... அதிரடி அரசியலை தொடங்கிய தினகரன் - தினகரன் ஜெயலலிதா

எம்எல்ஏ, எம்பி, பொருளாளர், துணை பொதுச்செயலாளர், அதிமுகவின் அதிகார மையம், அதிரடியும் அமைதியும் கலந்த அரசியல் தலைவர் அமமுக பொதுச்செயலாளர் தினகரன். தமிழ்நாட்டில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு முதலமைச்சர்களை உருவாக்கியதன் பின்னணியில் இருந்தவர்.

தினகரன்
dinakaran
author img

By

Published : Mar 3, 2021, 1:06 PM IST

திருத்துறைப்பூண்டி தினகரன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1963ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பிறந்தார் தினகரன். இவர், சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரன், இவரின் சகோதரர்.

பெரியகுளம் தொகுதி எம்பி

ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வந்த தினகரன், அதில் திறம்பட செயல்பட்டதால் அவரின் நம்பிக்கையை பெற்றார். கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தினகரனுக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. அப்போது தினகரனுக்காக தேர்தல் வேலை பார்த்தவர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். வாக்கு எண்ணிக்கையில் பெரியகுளம் தொகுதியில் இழுபறி என முதலில் செய்திகள் வந்தாலும், இறுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனார் தினகரன்.

பின்னணியில் தினகரன்

இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைத்தார் தினகரன். இதன் பயனாக 2001 சட்டமன்ற தேர்தலின்போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பன்னீர் செல்வத்திற்கு, பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பின்னணியாக இருந்தவர் தினகரன்.

பன்னீர்செல்வத்துடன் தினகரன்
பன்னீர்செல்வத்துடன் தினகரன்

அதிகார மையம்

அதிமுகவின் அதிகார மையம் தினகரன் எனும் அளவுக்கு அவரது அதிகாரம் கட்சியில் கொடி கட்டிப் பறந்தது. அதிமுக பொருளாளர் பதவியும் தினகரனுக்கு கிடைத்தது . இதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் தினகரன்.

அதிமுகவில் இருந்து நீக்கம்

டிசம்பர் 2011-இல் தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நிரந்தரமாக விலக்கி வைத்தார் ஜெயலலிதா. பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் தினகரன் தன்னை மீறி அரசியல் செய்யக்கூடும் என ஜெயலலிதா கருதியதாலோ என்னவோ அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

சசிகலாவுடன் தினகரன்
சசிகலாவுடன் தினகரன்

மீண்டும் அதிமுகவில்

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுக்கு உதவியாக மீண்டும் அதிமுகவுக்குள் நுழைந்தார் தினகரன். அவரை துணைப் பொதுச்செயலளராக நியமித்தார் சசிகலா. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார் தினகரன். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரில், இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்தது. இதனிடையே இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன். பின்னர் நடைபெற்ற மறுதேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார் தினகரன்.

தினகரன்
தினகரன்

எம்எல்ஏக்களை பாதுகாத்த தினகரன்

ஆட்சி அமைக்க உரிமை கோரி சசிகலா தமிழ்நாடு ஆளுனரை சந்தித்தபோது தினகரனும் உடன் சென்றார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திய நிலையில், அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் வைத்து மாற்று அணிக்கு செல்லாமல் பாதுகாத்தவர் தினகரன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பற்கு காரணமானவர்களில் தினகரனும் ஒருவர்.

Dhinakaran  அதிரடி அரசியலை தொடங்கிய தினகரன்  தினகரன்  ஆர்கே நகர் எம்எல்ஏ தினகரன்  தினகரன் சசிகலா  தினகரன் ஜெயலலிதா  அமமுக எதிர்காலம்
அதிமுக அமமுக

அமமுக தொடக்கம்

அதிமுக அணிகள் இணைப்புக்கு பின் கட்சியில் இருந்து தினகரன் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமமுக கட்சியை மேலூரில் தொடங்கினார் தினகரன். இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். இதனால் முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு வெளியேற தொடங்கினர். இதனையடுத்து தினகரனின் செயல்பாட்டில் சற்று அமைதி தெரிந்தது.

அதிரடி அரசியலில் தினகரன்

ஓ. பன்னீர்செல்வத்தின் போர்க்கொடி, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், வருமானவரி சோதனை, குக்கர் சின்னம் வழக்கில் தோல்வி, என பல இறங்கு முகங்களை சந்தித்து சில காலம் அமைதியாக இருந்த தினகரன், சிறையில் இருந்து சசிகலா திரும்பிய பிறகு மீண்டும் அதிரடி காட்ட தொடங்கியுள்ளார்.

தற்போது நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயார் என கூறியுள்ளார். ஒருவேளை கூட்டணி அமைந்தாலும் அமமுக கூட்டணி வெல்லுமா, தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும். அனைத்திற்குமான பதில் தமிழ்நாடு வாக்காளர்களின் கையில்.

இதையும் படிங்க: அமமுக விருப்ப மனு விநியோகம்! - டிடிவி. தினகரன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.