’சின்னக் கலைவாணர்’ எனப் போற்றப்படும் ’ஜனங்களின் கலைஞன்’ விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல்.16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (ஏப்ரல்.17) அதிகாலை காலமானார்.
அவரது மறைவிற்கு திரையுலகினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ”மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்குமே பேரிழப்பாகும்.
அந்த அளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார். “ஜனங்களின் கலைஞன்” எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
விவேக் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வைகை மண்ணின் மைந்தனும்... அப்துல் கலாம் காதலனும்!