சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் (ஆக. 20) இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழையானது பெய்துவருகிறது. இந்த கனமழையின்போது முக்கிய சாலையாக கருதப்படும் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஈகா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள பெரிய மரமானது திடீரென நேற்று (ஆக. 21) காலை வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது.
அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆட்டோ, லாரி உள்பட மூன்று வாகனங்கள் மீது மரம் விழுந்ததில், வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
![சென்னையில் கனமழை, கனமழை, மழை, rain, chennai rain, tree fallen in poonamalle highroad, poonamalle, chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12841494_tree1.jpg)
போக்குவரத்தில் மாற்றம்
இதையடுத்து, பொதுமக்கள் விரைவாக அளித்த தகவலின் பேரில், சென்னை மாநகராட்சி, காவல் துறையினர் ஆகியோர் இணைந்து சாலையின் நடுவே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரம் விழுந்ததால் சென்ட்ரல் பகுதியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, சேத்துப்பட்டு வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
![சென்னையில் கனமழை, கனமழை, மழை, rain, chennai rain, tree fallen in poonamalle highroad, poonamalle, chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12841494_tree.jpg)
தத்தளிக்கும் முக்கியச் சாலைகள்
சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கியச் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கிய மழை: மழைநீரால் சூழப்பட்ட ரிப்பன் மாளிகை