ETV Bharat / city

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

trb-polytechnic-lecturer-exam
trb-polytechnic-lecturer-exam
author img

By

Published : Mar 18, 2022, 7:55 AM IST

சென்னை: இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள், கல்வித் தகுதி ஆவணங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் உள்ளிட்ட பிற சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான கால அவகாசம் 11.3.2022 முதல் 18.3.2022 வரை வழங்கப்பட்டது.

இந்த சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் கால அவகாசம் கோரி விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்த கோரிக்கைகளை ஏற்று பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 18.3.2022-லிருந்து 25.3.2022 வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் , விண்ணப்பதாரர்களின் அடுத்தடுத்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு, பதில் அளிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரதட்சனை கொடுமை வழக்கு - கணவருக்கு 10 ஆண்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.