ETV Bharat / city

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்: இணையதளத்தில் வெளியீடு - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 மதிப்பெண் பட்டியல்

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டுக்கான மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்
author img

By

Published : Aug 26, 2019, 11:15 PM IST

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடங்களை எடுப்பதற்கான பட்டதாரி ஆசிரியர் பணிக்குரிய தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பட்டதாரிகள் ஓஎம்ஆர் சீட்டின் மூலம் எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து இந்தத் தேர்விற்கான முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ஓஎம்ஆர் சீட்டினை தேர்வர்கள் சரியாக பூர்த்தி செய்யவில்லை என்பதை குறிப்பிட்டிருந்தனர். மேலும், சில தேர்வர்கள் தாங்கள் எழுதும் விருப்பப்பாடம் குறித்தும் சரியாக பதிவு செய்யவில்லை எனவும்; இதுபோன்று சரியாகப் பதிவு செய்யப்படாத ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள்களை ஸ்கேனர் மிஷின் எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆசிரியர் தகுதித்தேர்வில் 316 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் 243 பெண்களும் 73 ஆண்களும் ஆவார்கள். இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் தங்களின் பயனாளர் அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு

Body:ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு

சென்னை,

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில் 316 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடங்களை எடுப்பதற்கான பட்டதாரி ஆசிரியர் பணிக்கு உரிய ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 தேர்வர்கள் ஓஎம்ஆர் ஷீட் மூலம் எழுதினர்.
இந்த தேர்விற்கான முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், ஓஎம்ஆர் சீட்டினை தேர்வர்கள் சரியாக பூர்த்தி செய்யவில்லை என்பதை குறிப்பிட்டிருந்தனர். மேலும் சில தேர்வர்கள் தாங்கள் எழுதும் விருப்பப்பாடம் குறித்தும் சரியாக பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற சரியாக பதிவு செய்யப்படாத ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள்கள் ஸ்கேனர் மிஷன் எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டது என அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்த தேர்வில் 316 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 243 பெண்களும் 73 ஆண்களும் ஆவர்கள். இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர்கள் தங்களின் பயனாளர் அடையாள என் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.