ETV Bharat / city

மூதாட்டியின் புடவையில் பற்றி எரிந்த தீ - துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து காவலர் - Traffic police put out the fire

பெரம்பூர் அருகே கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த மூதாட்டியின் புடவையில் பற்றிய தீயை போக்குவரத்து காவலர் துரிதமாக செயல்பட்டு அணைத்தார்.

மூதாட்டியை மீட்ட காவலர்
மூதாட்டியை மீட்ட காவலர்
author img

By

Published : Oct 28, 2021, 4:02 PM IST

சென்னை: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அகரம் சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி கோயிலில் 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று (அக்.28) சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென விளக்கிலிருந்து பரவிய தீ, மூதாட்டியின் புடவையில் பட்டு கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட போக்குவரத்து தலைமை காவலர் செந்தில் குமார், உடனடியாக ஓடிவந்து மூதாட்டியின் புடவையிலிருந்து உடலுக்கு தீ பரவாத படி கைகளால் தீயை அணைத்தார். இதில், மூதாட்டி காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மூதாட்டியை மீட்ட காவலர்

துரிதமாக செயல்பட்டு மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய தலைமை காவலர் செந்தில்குமாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்திற்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.