சென்னை கிண்டியிலிருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலை மற்றும் ஆலந்தூர் கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து வடபழனி செல்லும் ஜிஎஸ்டி சாலையோரம் ஆங்காங்கே மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.
இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன.
இந்த நிலையில் இன்று காலை கிண்டி, ஆலந்தூர் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் காலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் சாலை ஓரம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் சுமார் ஒரு மணி நேரமாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்
சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.