ETV Bharat / city

பிரதமர் வருகை - சென்னையில் நாளை போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! - PM Modi

பிரதமர் மோடி நாளை (மே 26 )பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வருகை தர உள்ள நிலையில், சில வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

motor change
motor change
author img

By

Published : May 25, 2022, 10:14 PM IST

சென்னை: பிரதமர் மோடி நாளை (மே 26) ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னைக்கு வருகை தர உள்ளார். இதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதைச்சுற்றி உள்ள சாலைகளிலும் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி சந்திப்பு வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். ஆகையால், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைளில் தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னைக்கு பிரதமர் மோடி வருகை - 5 அடுக்குப்பாதுகாப்பு... ட்ரோன்கள் பறக்கத்தடை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.