ETV Bharat / city

உணவக உரிமையாளர்கள் மீது தொடர் தாக்குதல்: காவல்துறை கூடுதல் இயக்குநரிடம் வணிகர்கள் புகார் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: உணவக உரிமையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால், காவல்துறை கூடுதல் இயக்குநரிடம் வணிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

உணவக உரிமையாளர்கள் மீது தொடர் தாக்குதல்
உணவக உரிமையாளர்கள் மீது தொடர் தாக்குதல்
author img

By

Published : Apr 16, 2021, 6:20 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், கடந்த 8ஆம் தேதி முதல் உணவகங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அரசு உத்தரவிட்டது.

ஆனால். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என கூறி உணவக உரிமையாளர்களை காவல் துறையினர் தாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநரிடம் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையினர் சார்பில் இன்று (ஏப்ரல்.16) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளர்கள் மீது தொடர் தாக்குதல்

இது குறித்து பேரவை தலைவர் சௌந்தரராஜன் கூறியதாவது, "சமீபத்தில் கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் உணவக உரிமையாளர்களை காவல் துறையினர் தாக்கும் காணொலி வெளியானது. ஓட்டல் உரிமையாளர்களை காவல்துறையினர் தாக்குவது கண்டனத்துக்குரியது என்றார்.

இதையும் படிங்க: உணவகத்தில் தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்: மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.