ETV Bharat / city

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் - வியாபாரிகள் சங்க பேரவை போராட்டம் - bursting of firecrackers

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை நீக்கக்கோரி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குக் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டை நீக்கக்கோரி வியாபாரிகள் சங்க பேரவை போராட்டம்

author img

By

Published : Oct 11, 2022, 10:13 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள் மாங்காட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பட்டாசு வெடிக்கும் நேரம் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாங்காட்டில் உள்ள தபால் நிலையத்திற்கு வந்த நிர்வாகிகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தபால்களை அனுப்பினர்.

மேலும், தமிழ்நாட்டில் அணு உலைகள், தோல் தொழிற்சாலைகள் இதனால் ஏற்படாத மாசு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்டு விடுமா, இதற்குத் தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், பட்டாசு விற்பனையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களைப் பாதுகாக்க, உள்ளூர் வணிகத்தை நசுக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை துணைத் தலைவர் ராம.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற தபால் அனுப்பும் போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தபால் அனுப்பும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டை நீக்கக்கோரி வியாபாரிகள் சங்க பேரவை போராட்டம்

இதையும் படிங்க: தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கும் நேரம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.