பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் இயக்கி, வெளியாக உள்ள திரைப்படம் திரௌபதி. இத்திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த டிரெய்லரில், சாதி ஆணவக்கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் அந்தப் படத்தை தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' தமிழகத்தில் அமைதி நிலவ இத்திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும். டிரெய்லரில் உள்ள வசனங்களைப் பார்க்கும்போது தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதி தந்தார்கள் எனக் கேள்வி எழுகிறது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை இந்தப்பட காட்சிகள் மீறி உள்ளன' எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்காவிட்டால், உயரதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கோவை ராமகிருட்டிணன் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ் இசைக் கலைஞர்களை புறக்கணிக்கும் அனிருத்: இசையமைப்பாளர் தீனா கேள்வி