இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று புதிதாக 574 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 689 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி மொத்தமாக இதுவரை 8 லட்சத்து 33 ஆயிரத்து 585 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், 8 லட்சத்து 16 ஆயிரத்து 205 பேர் குணமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், இதுவரை ஒரு கோடியே 52 லட்சத்து 5 ஆயிரத்து 61 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
- சென்னை மாவட்டம் - 2,29,860
- கோயம்புத்தூர் மாவட்டம் - 53,918
- செங்கல்பட்டு மாவட்டம் - 51,160
- திருவள்ளூர் மாவட்டம் - 43,358
- சேலம் மாவட்டம் - 32,261
- காஞ்சிபுரம் மாவட்டம் - 29,134
- கடலூர் மாவட்டம் - 24,873
- மதுரை மாவட்டம் - 20,901
- வேலூர் மாவட்டம் - 20,634
- திருவண்ணாமலை மாவட்டம் - 19,323
- தேனி மாவட்டம் - 17,043
- தஞ்சாவூர் மாவட்டம் - 17,595
- திருப்பூர் மாவட்டம் - 17,668
- விருதுநகர் மாவட்டம் - 16,531
- கன்னியாகுமரி மாவட்டம் - 16,714
- தூத்துக்குடி மாவட்டம் - 16,232
- ராணிப்பேட்டை மாவட்டம் - 16,064
- திருநெல்வேலி மாவட்டம் - 15,510
- விழுப்புரம் மாவட்டம் - 15,143
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 14,564
- ஈரோடு மாவட்டம் - 14,168
- புதுக்கோட்டை மாவட்டம் - 11,521
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10,866
- திருவாரூர் மாவட்டம் - 11,115
- நாமக்கல் மாவட்டம் - 11,521
- திண்டுக்கல் மாவட்டம் - 11,164
- தென்காசி மாவட்டம் - 8,380
- நாகப்பட்டினம் மாவட்டம் - 8,371
- நீலகிரி மாவட்டம் - 8,137
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 8,027
- திருப்பத்தூர் மாவட்டம் - 7,546
- சிவகங்கை மாவட்டம் - 6,629
- ராமநாதபுரம் மாவட்டம் - 6,400
- தர்மபுரி மாவட்டம் - 6,553
- கரூர் மாவட்டம் - 5,368
- அரியலூர் மாவட்டம் - 4,672
- பெரம்பலூர் மாவட்டம் - 2,260
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 940
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,033
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரிப்பு