ETV Bharat / city

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top ten news at 7 am  top ten news  top news  top ten  latest news  tamilnadu latest news  tamilnadu news  news update  morning news  செய்திச் சுருக்கம்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய நிகழ்வு  காலை செய்திகள்  7 மணி செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  அண்மை செய்திகள்
செய்தி சுருக்கம்
author img

By

Published : Nov 12, 2021, 7:53 AM IST

1. உலக நிமோனியா தினம்

நிமோனியா நோயை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் தேதி உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2. சிறப்பு மருத்துவ முகாமை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், பருவகால நோய்களை குணப்படுத்த மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.12) தொடங்கி வைக்கிறார்.

3. கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கல்வி நிலையங்களுக்கு இன்று (நவ.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5. காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம்

மணப்பாறை அடுத்த மொண்டிபட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அலகு இரண்டில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

6. அதிமுக பாஜக இடையே தகராறு; வானதி சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்

அதிமுக, பாஜக இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வழக்கில் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை கூடுதல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

7. காவல் ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு முடித்து வைப்பு

காவல் ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

8. சிபிஎம் கட்சிப் பிரமுகர் கொலை - 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரை கொலை செய்த கும்பலை காவல் துறையினர் இன்று (நவ.11) கைது செய்தனர்.

9. 'தனிநபரை அவமதிக்கும் நோக்கமில்லை' - அன்புமணிக்குப் பதிலளித்த சூர்யா

'ஜெய் பீம்' திரைப்படத்தில் எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

10. கொட்டும் மழையில் காதலரை கரம்பிடித்த செம்பருத்தி ஷபானா

பிரபல சின்னத்திரை நடிகை ஷபானாவிற்கு இன்று(நவ.11) திருமணம் நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.