1.2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - நீதிபதிகள் காட்டம்
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
2.ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?
மழைக் காலங்களில் விடுக்கப்படும் ரெட், ஆரஞ்ச், மஞ்சள் அலர்ட் என்றால் என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
3.உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4.தடுப்பூசி போடவில்லை என்றால் சம்பளம் இல்லை - மாநகராட்சி நிர்வாகம் கெடுபிடி
ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என தானே மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5.முன்னணி நிறுவனங்களில் ஆராய்ச்சி - மேம்பாட்டுத்துறையில் பணியாற்றும் சென்னை ஐஐடி மாணவர்கள்!
சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கான முன் வேலைவாய்ப்புகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. குவால்காம், மைக்ரோசாப்ட், ஹனிவெல், டெக்ஸ் இன்ஸ்ட்ரூமென்ட், கோட்டுமென் சாக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
6.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர், பேராசிரியர்கள் நியமிக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்ட தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7.மருத்துவமனையில் நடிகை பூனம் பாண்டே: கணவர் கைது
மனைவியை தாக்கியதாக நடிகை பூனம் பாண்டேயின் கணவர் சாம் பாம்பேயை மும்பை காவல்துறையினரால் கைது செய்தனர்.
8.விருது பட இயக்குநருடன் கைக்கோர்த்த மம்முட்டி!
மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மம்முட்டியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
9.'ஜெய் பீம்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சிவக்குமார்!
நடிகர் சிவக்குமார் 'ஜெய் பீம்' படக்குழுவினரை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
10.வசீம் அக்ரம் கொலை வழக்கு - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது!
வசீம் அக்ரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கூலிப்படையை சேர்ந்த முக்கிய நபரை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.