ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM
நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM
author img

By

Published : Oct 24, 2021, 1:05 PM IST

1.'விருதை எதிர்பார்க்கவில்லை, கே.பி. சார் இல்லாதது வருத்தம்'- தாதா சாகேப் ரஜினிகாந்த்!

“தாதா சாகேப் பால்கே விருது எனக்கு கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பி. சார் இல்லையே என்பது எனக்கு ரொம்ப வருத்தம். விருது வாங்கிய பின்னர் உங்களிடம் பேசுகிறேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

2.வணிகவரித் துறைக்கு இழப்பை ஏற்படுத்தும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு அரசுக்கு வணிக வரித்துறையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் விதமாக ஏமாற்றுபவர்களுக்கு துணையாக போகும் வணிக வரித்துறை அலுவலர்கள் யாராகினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்

3.பெட்ரோலை துரத்தும் டீசல்.. 100-ஐ தாண்டிய அவலம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்..!

சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 100 ரூபாய் 59 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

4.தற்காலிக காவல் ஆணையர் அலுவகம் - ஆய்வு செய்த டிஜிபி

செம்பாக்கம் பகுதியில் தற்காலிகமாக செயல்பட உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை தமிழ்நாடு காவல்துரை தலைவர் சைலேந்திரபாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

5.தலைவா.. தலைவா... ரசிகர்கள் வாழ்த்து மழையில் டெல்லி சென்றார் ரஜினிகாந்த்!

டெல்லியில் திங்கள்கிழமை (ஆக.25) நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.

6.கால்வாயில் தவறி விழுந்த பசு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

திருவெற்றியூரில் கால்வாய் சேற்றில் விழுந்து சிக்கிய பசுவை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

7.ஏடிஎம் மையங்களில் உதவுவது போல் திருட்டு - பர்தா அணிந்த பெண் கைவரிசை

ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் நபர்களுக்கு உதவுவது போன்று நடித்து அவர்களிடம் பணத்தை நூதனமாகத் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

8.பொள்ளாச்சி பாலியல் வழக்கு; 'பிரியாணி பர்ஸ்ட், பிரியாவிடை நெக்ஸ்ட்'

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 7 காவலர்கள், மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டே குற்றவாளிகளை உறவினர்களுடன் பேச அனுமதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

9.நெல்லையில் உணவுத் திருவிழா!

நெல்லையில் நடைபெற்ற பாரம்பரிய சரிவிகித உணவுத் திருவிழாவில் நவதானிய உணவு வகைகள் உள்பட 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

10.ராமேஸ்வரம் டூ அயோத்தி.. 2800 கி.மீ., நடைபயணம்.. ராணுவ வீரர் கரோனா விழிப்புணர்வு பயணம்!

இந்திய ராணுவ வீரர் ஒருவர், 197 நாட்டுக் கொடிகளை ஏந்தி கரோனா விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.