ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - Top 10 News @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

9 PM
9 PM
author img

By

Published : Mar 27, 2021, 9:22 PM IST

1. -1 கோடியிலிருந்து +44 கோடிக்கு சென்ற விஜயபாஸ்கர் சொத்து! - அறப்போர் இயக்கம்

சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அமைச்சர்கள் ஏராளமானோரின் சொத்து மதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

2. இரும்புக்கம்பி உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

சென்னை: செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, இரும்புக் கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக இரும்புக் கம்பி உற்பத்தி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

மயிலாடுதுறை: தரங்கம்பாடி, நல்லாடை என்னுமிடத்தில் உள்ள சுந்தரநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. ஆவடி தொகுதியில் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி எம்ஜிஆர் மக்கள் கட்சி வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

5. ஜார்கண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வு

ஜார்கண்ட்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

6. சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் கார் மோதி உயிரிழப்பு!

ராமநாதபுரம்: சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

7. தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கிங்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷுக்கு கரோனா தொற்று பாதிப்பு குறையாததால், மருத்துவர்கள் ஆலோசனைப்படி சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

8. அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் புரோ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ஹூவாமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் புரோ ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

9. காடுவெட்டி குருவை மருத்துவக் கொலை செய்த ராமதாஸ்! - மகள் அடுக்கும் குற்றச்சாட்டுகள்!

தருமபுரி: காடுவெட்டி குருவுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 48 நாள்கள் மயக்கத்திலேயே வைத்திருந்து மருத்துவக்கொலை செய்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது குருவின் மகள் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

10. கண்டனத்திற்கு உள்ளான பாஜகவின் இருசக்கர வாகன பேரணி

கோயம்புத்தூர்: ஸ்மிருதி இரானி பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியில் பாஜகவினர் முகக்கவசம் அணியாமல் பங்கேற்றது பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.