1.மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் கரோனா: அதிர்ச்சி தகவல்!
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கரோனா தொற்று மனிதர்களிடமிருந்து மின்க்ஸூக்கும், அதே போல் மின்க்ஸிடமிருந்து மனிதர்களுக்கும் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.
2.கரோனா எதிரொலி: தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவு
கரோனா தொற்று பரவலால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளதாக, போக்குவரத்து துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
3.சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கைது!
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசனை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
4.ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளனர். இதில் ஐபிஎல் தொடரில் ஆடாத வீரர்களான புஜாரா, விஹாரி ஆகியோரும் இந்திய அணியோடு இணைந்துள்ளனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இணைந்துள்ளார்.
5.கரோனாவால் உயிரிழந்த சல்மான்கான் பட நடிகர்!
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ஹரிஷ் பச்சாட்டா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
6.அதிமுக - திமுக இடையே உள்ள புரிதல் என்ன? - கே.டி.ராகவன் கேள்வி
திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு அனுமதி வழங்கும் அதிமுக அரசு, பாஜக வேல் யாத்திரை தொடங்கும் முன் கைது செய்யப்படுவது ஏன்?. இதில் அதிமுக - திமுக இடையே உள்ள புரிதல் என்ன?. முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்டம் இல்லையா?. அதன் மூலம் கரோனா பரவாதா? என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
7.'குடும்ப கட்சிகள் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்'- பிரதமர் நரேந்திர மோடி
குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு தேசிய கட்சி கூட அதற்கு இரையாகிவிட்டது என்று காங்கிரஸை மறைமுகமாக தாக்கினார். பிகார் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில், கட்சித் தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
8.ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள்: சாதனை படைத்த அரசு மருத்துவர்கள்!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த மூன்று பெண் குழந்தைகளைக் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
9.பெண் குழந்தைகள் பெயரில் பெயர் பலகை!
இந்தக் காலத்தில் பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. அவர்கள் முன்னோக்கி வருவதைப் பார்க்க முடிகிறது. வீடுகளில் பெண்களின் பெயர்கள் பொறித்த பலகைகளைப் பார்க்கலாம். பெண் குழந்தைகளின் பெயரில் இல்லங்கள் அமைந்திருப்பது வீட்டுக்கு மரியாதை. பெண் குழந்தைகள் பெயரில் பெயர் பலகை அமைந்திருக்கும் இக்கிராமம் குறித்து பார்க்கலாம்.
10.பொழிச்சலூரில் இருசக்கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சி வெளியீடு
பொழிச்சலூரில் கல்லூரி மாணவனின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் லாவகமாகத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.