1.அத்வானி பிறந்தநாள் - நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று (நவ. 8) தனது 94ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.
2.Kotkapura Incident: குற்றப்பத்திரிகை எங்கே - காங்கிரஸ் அரசிடம் சித்து காட்டம்
கோட்காபூரா காவல் துறை துப்பாக்கிச்சுடுதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏன் தாமதமாகிறது என பஞ்சாப் அரசிடம் நவ்ஜோத் சிங் சித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
3.மருத்துவமனையில் இருந்து ரப்பர் படகு மூலம் கைக்குழந்தை மீட்பு
சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தை உட்பட ஐந்து நோயாளிகளை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
4.டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெங்கு பாதிப்பில் மிகவும் குறைவாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், மழை வெள்ளப் பாதிப்பை முற்றிலுமாக தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5.முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6.இரண்டாம் நாள் மக்களுடன் ஸ்டாலின்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.
7.'விமான பைலட்டுகளுக்கு இவருதான் பிக் பாஸ்' - யார் இந்த வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்?
பொதுவாக ஒரு வாகனத்தில் பயணம் செய்யும் போது, அதன் ஓட்டுநரை நம்பித்தான் நம் பயணம் இருக்கும். ஆனால், விமானத்தில் மட்டும் விதிவிலக்கு உள்ளது. ஏனென்றால், விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்குத் தகவல்கள் கொடுக்கும் பிக் பாஸாக வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் உள்ளனர்.
8.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழையும், அதனை தொடர்ந்து 2 நாள்களுக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
9.தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டிற்கு நவம்பர் 10ஆம் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டுள்ளது. அன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.துபாய் எக்ஸ்போவில் திரையிடப்படும் ஜோதிகாவின் படம்!
துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத் திரை விழாவில், ஜோதிகா நடிப்பில் வெளியான 'காற்றின் மொழி' திரைப்படம் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.