ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS 7 PM
TOP 10 NEWS 7 PM
author img

By

Published : Nov 6, 2021, 7:39 PM IST

1.திருச்செந்தூர் கோயில் பெருந்திட்ட பணிகள்- முதலமைச்சர் ஆலோசனை

திருச்செந்தூர் கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

2.கருணாநிதி நினைவிடம்: விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

3.சென்னை காவல் ஆணையருக்கு ராணுவ மேஜர் கடிதம்...

ஜம்மு காஷ்மீரில் தனக்கு கீழ் பணிபுரியும் ராணுவ வீரரின் குடும்பத்தை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையருக்கு ராணுவ மேஜர் கடிதம் அனுப்பியுள்ளார்.

4.மதுரை ரயில் நிலைய சந்திப்பில் மீண்டும் மீன் சிலை!

மதுரை ரயில் நிலையம் முன் அமைக்கப்பட்டிருந்த பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன் சிலைகளை மீண்டும் அமைக்க மதுரை ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

5.200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்: குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு, ஊர் திரும்பிய போது, 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

6.புதிதாக 10,929 பேருக்கு கரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 929 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

7.ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை - சு.வெங்கடேசன் எம்.பி.

ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்காக, சென்னையில் புறப்பாடு மையம் தேவை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

8.நான் ஜெயலிதாவின் மகள் - சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற பெண்ணால் பரபரப்பு

சென்னையில் வசித்து வரும் பிரேமா என்ற பெண், தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

9.கோவா சர்வதேச திரைப்பட விழா: திரையிட தேர்வான தமிழ்ப்படங்கள்!

கோவாவில் நடைபெறும் 52ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த அயல்நாட்டு திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 'கூழாங்கல்' திரைப்படம் திரையிடப்படுகிறது.

10.சிறு தெய்வ வழிபாட்டை நினைவுகூறும் 'வா சாமி' - கவிஞர் அருண் பாரதி நெகிழ்ச்சி

சென்னை: 'அண்ணாத்த' படத்தில் “வா சாமி” பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என அப்பாடலை எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.