ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM - tamilnadu news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Oct 19, 2021, 5:22 PM IST

1.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டுக்கு சீல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீடு மற்றும் அவரது நண்பர் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

2.குடியரசுத் தலைவர், பிரதமர் மிலாது நபி வாழ்த்து!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

3.இந்தியா- பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி தேவையா?- அசாதுதீன் ஒவைசி!

பெட்ரோல், டீசல் உயர்வு, சீன விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசமாட்டார், மௌன குரு ஆகிவிட்டார் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவனத் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறினார்.

4.பள்ளி ஆசிரியர் வயதுவரம்பு.. கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு திரும்ப பெறும் வழிமுறை- மக்கள் நீதி மய்யம்

பள்ளி ஆசிரியர் நியமன உச்ச வயது வரம்பில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் அறிக்கை விடுத்துள்ளது.

5.ரீமேக்கான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல்: வெளியான 'ருத்ரன்' அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ருத்ரன்” படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்படவுள்ளது.

6.ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் தொடக்கம்!

ஒரு நாள் கூத்து திரைப்பட இயக்குநரின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

7.சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கர்ணன்

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் விருது வென்று சாதனை படைத்துள்ளது.

8.முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு - எடப்பாடி பழனிசாமி நாளை ஆளுநருடன் சந்திப்பு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு என்பது போன்ற கோரிக்கைகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை(அக்.20) ஆளுநர் ரவியை சந்திக்கிறார்.

9.ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு ரூ.3.52 கோடி செலவு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு இதுவரை 3.52 கோடி செலவு செய்துள்ளதாக நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார்.

10.Exclusive சொமேட்டோ சர்ச்சை - பாதிக்கப்பட்டவரின் வீடியோ பதிவு

சொமேட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் (விகாஷ்) இந்தி குறித்து பேசிய கருத்து சர்ச்சையாகி சமூக வலைதளங்களில் வலுவான கண்டனக் குரல் எழுந்தது. இதையடுத்து இன்று சொமேட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து தமிழில் அறிக்கை வெளியிட்டது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விகாஷ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக வீடியோ பதிவு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.