ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 NEWS @ 5 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 29, 2021, 5:20 PM IST

1. இந்த மாவட்டங்களில் எல்லாம் இடி மின்னலுடன் கூடிய கனமழை?

சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. 'இதற்காக எல்லாம் தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது'

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

3. ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற, ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4. வங்கிகளுக்கு 21 நாள்கள் விடுமுறை உண்மைதானா?

அக்டோபர் மாதத்தில் 21 நாள்களில் வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

5. தனியார் பள்ளிகள் கோரிக்கை

1 முதல் 5ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கக்கோரி தனியார் பள்ளிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

6. 'சிங்காரச் சென்னை 2.0' - விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

7. 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

8. 'தனிப்பட்ட பகை இல்லை, சேவை செய்ய விரும்புகிறேன்'- நவ்ஜோத் சிங் சித்து!

தனக்கு யாருடனும் தனிப்பட்ட பகை இல்லை, பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

9. டெல்லியில் கேப்டன்.. கலகலக்கும் காங்கிரஸ்.. அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?

டெல்லி செல்லும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா ஆகியோரை புதன்கிழமை (செப்.29) சந்திக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

10. சாண்டி மகனுக்கு WWE வீரர் பெயர்- ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல நடன இயக்குநர் சாண்டி தனது மகனுக்கு WWE வீரரின் பெயரை வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.