ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 pm

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Oct 6, 2021, 3:37 PM IST

1. புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

3. 'நெல் கொள்முதல்; ஆன்லைன் பதிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை'

நேரடி கொள்முதல் நிலயங்களில் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக ஆன்லைன் பதிவு குறித்த ஒன்றிய அரசின் உத்தரவு பற்றி உழவர் அச்சப்படத் தேவையில்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

4. ஸ்டாலின் உத்தரவை ஏற்று கேரள முதலமைச்சரைச் சந்தித்த திமுக எம்பிக்கள்!

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்த நீதியரசர் ஏ.கே. ராஜன் அளித்த பரிந்துரையையும் இணைத்து கேரள முதலமைச்சரிடம் திமுக மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று வழங்கினார்.

5. நெல்லையில் பலத்த பாதுகாப்பு: 2 ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பி, 2,400 காவலர் குவிப்பு

பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத நெல்லையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் சூடு பற்றிக்கொண்டுள்ளது. இன்று நடைபெற்றுவரும் முதல்கட்டத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2400 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

6. 'உழவர் கொல்லப்படுகின்றனர்; இந்தியாவில் இப்போது நிலவுகிறது சர்வாதிகாரம்!'

பிரதமர் நரேந்திர மோடி லக்னோவைப் பார்வையிடச் சென்றார். ஆனால், உழவர் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்குச் செல்லவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

7. லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி

லக்கிம்பூருக்குச் செல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

8. ஆபத்பாந்தவன்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்த வெகுமதி!

சாலையில் வாகன விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்போருக்கான வெகுமதித் திட்டத்தை ஒன்றிய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

9. ராமாயண ராவணன் மறைவு: மோடி என்ன சொன்னார் தெரியுமா?

மும்பை: ராமாயண தொலைக்காட்சித் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் திரிவேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

10. சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படத்துக்குச் சான்றிதழ் வழங்கிய தணிக்கைக் குழு

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.