ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @11AM - etvbharat

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 8, 2021, 11:17 AM IST

1. மீண்டும் வைகையில் நீர் ஓடும் - பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் வைகையில் நீர் ஓடும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

2. பழவேற்காடு முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமையவிருக்கும் பகுதியில் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

3. இன்று முதல் அதிகாலையில் மெட்ரோ ரயில் சேவை!

மெட்ரோ ரயில் சேவை இன்று (ஜூலை 8) முதல் காலை 5.30 மணிக்கு தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

4. வருமான வரித்துறை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் நேற்று (ஜூலை 7) பொறுப்பேற்றுக்கொண்டார்.

5. மேகதாது அணை விவகாரம் - காங்கிரஸ் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

6. ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்: ஓபிஆர் 'வாழ்த்து' ட்வீட்

நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

7. தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்!

ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனுக்கு என்னென்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

8. ஆனி மாத பிரதோஷ வழிபாடு: பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்!

தஞ்சாவூரில் ஆனி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

9. படப்பிடிப்புக்கு திரும்பும் உதயநிதி ஸ்டாலின்!

தமிழில் ரீமேக் செய்யப்படும் 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் கலந்துகொள்ளவுள்ளார்.

10. 'மோகன்தாஸ்' படத்தில் தனது பகுதியை முடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' படத்தில் தனது பகுதியை முடித்துவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.