ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM - etvbharat

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

பகல் 11 மணி செய்திச்சுருக்கம்
பகல் 11 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 16, 2021, 11:13 AM IST

1. சென்னை தலைமை செயலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

2. மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகும் - திருமாவளவன்

மேகதாதுவில் அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களிடம் கூறினார்.

3. 'மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்..' - அண்ணாமலை பகிரங்க மிரட்டல்

மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்; கையிலெடுப்போம் என ஊடகங்களுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

4. சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

ஆடி பிறப்பை முன்னிட்டு சபரிமலை கோயில் இன்று (ஜூலை 16) மாலை திறக்கப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் 5 நாள்களுக்கு தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

5. 'லேட்டா வந்தாலும் கெத்துதான்' 24 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தைப் பெற்ற காவலர்கள்

10 ஆண்டுகளில் கிடைக்கக்கூடிய முதலமைச்சர் காவல் பதக்கத்தை, சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு 642 காவலர்கள் நேற்று பெற்றுள்ளனர்.

6. பணியிட மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொண்ட செந்தில்பாலாஜி!

போக்குவரத்துத் துறையில் 81 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு, ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையின் நகலை, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டார்.

7. தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்- மா.சுப்பிரமணியம்

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

8. கரோனா நிலவரம்: ஒரே நாளில் 38,949 பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9. கவர்ந்திழுக்கும் இடையழகி கத்ரீனா கைஃப்!

பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் இன்று (ஜூலை 16) தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

10. viral video: பலூன் கேட்ச் - சமந்தாவுடன் சமத்தாக விளையாடும் நாய்..

நடிகை சமந்தா தனது செல்லப்பிராணியுடன் சேர்ந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.