ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கத்தைக் காணலாம்.

பிற்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 24, 2021, 1:40 PM IST

1. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது - இபிஎஸ்

'சரியான தலைமை இல்லாமல் நிர்வாகத் திறமையும் இல்லாமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத ஆட்சி நடைபெற்றுவருகிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2. ‘மக்களைத் தேடிச் செல்லும் அரசு திமுக’ - ஸ்டாலின்

சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ‘அரசை தேடி மக்கள் வந்த காலம் மாறி மக்களைத் தேடி அரசு செல்லும் காலம் இது’ எனத் தெரிவித்துள்ளார்.

3. தமிழ்நாடு முழுவதும் நடந்த ஸ்டாமிங் ஆபரேஷன்; ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக கொலைகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நள்ளிரவில் தமிழ்நாடு காவல் துறை ஸ்டாமிங் ஆபரேஷனை நடத்தி 560 ரவுடிகளைக் கைதுசெய்துள்ளது.

4. ‘சிங்கள போர் குற்றவாளிகளைத் தண்டிக்க இந்திய அரசு துணை நிற்க வேண்டும்’ - ராமதாஸ்

சிங்கள போர் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இந்திய அரசு துணைநிற்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

5. ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை

சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

6. நெத்தியடி - மாணவர்களிடம் மாற்றத்தை விதைக்கும் கேரளா

வரதட்சணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரதட்சணை வாங்க மாட்டேன், தரமாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகே விண்ணப்பங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

7. ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கு: வெளியான திடுக்கிடும் தகவல்!

ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட தம்பதியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

8. ஒடிசாவில் நவம்பரில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பைத் தொடர் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒடிசாவில் நடைபெற உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

9. MENTOR vs CAPTAIN: சார்ஜா யாருக்கு சாதகம் - பிளே-ஆஃப் நோக்கி சிஎஸ்கே

ஐபிஎல் 2021 தொடரின் பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையேயான 35ஆவது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று (செப். 24) இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.

10. 'சினிமாவில் காகித பூக்களுக்கே மரியாதை'

சினிமாவில் காகித பூக்களுக்கே மரியாதை, நிஜ பூக்களுக்கு இல்லை என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.