ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 PM
1 PM
author img

By

Published : Apr 2, 2021, 12:37 PM IST

1.'இந்த பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது' - ரெய்டு குறித்து துரைமுருகன்

இது அரசியல் ரீதியான ஐடி ரெய்டு. இது போன்ற பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது என திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

2. செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

3. 'தந்தையின் நினைவை அவமதிக்கும்போது அமைதியாக இருக்க மாட்டேன்' - உதயநிதிக்கு ஜெட்லி மகள் எச்சரிக்கை

மத்திய அமைச்சர்களாக இருந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் மரணம் குறித்து கருத்துத் தெரிவித்த திமுக இளைஞரணிச் செயலாளரும் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, ஜெட்லியின் மகள் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

4. நெருக்கடி நிலையை எதிர்கொண்டவர்கள் திமுகவினர் - ஆர்.எஸ். பாரதி

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில, வருமான வரி சோதனை நடப்பது உள்நோக்கம் கொண்டது என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

5. 'வாக்காளர்களுக்கு அல்வா' - சுயேச்சை வேட்பாளர் சொன்ன சீக்ரெட்

வாக்காளர்களுக்கு அல்வா கொடுத்து வாக்குக் கேட்ட சுயேச்சை வேட்பாளரின் செயல் பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

6. 'சபரீசன் வீட்டில் சோதனை திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு' - திருமா குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருவது பழிவாங்கல் நடவடிக்கை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7. ஆட்டோ மொபைல் சரக்குப் போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம் சாதனை

மார்ச் மாதத்தில் சென்னை ரயில்வே கோட்டம், முன் எப்போதுமில்லாத வகையில் அதிகபட்சமாக 74 சரக்கு ரயில்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் ரூ .17.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

8. தோட்டத்திற்குள் நுழைந்த சிறுவர்களை துன்புறுத்திய பாதுகாவலர்கள் கைது!

ஹைதராபாத்: தெலங்கானாவில் மாம்பழம் தோட்டத்திற்குள் நுழைந்த இரண்டு சிறுவர்களை, கொடூரமாகத் தாக்கியது மட்டுமின்றி மாட்டு சாணத்தைச் சாப்பிடுமாறு துன்புறுத்திய இரண்டு தோட்ட பாதுகாவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

9. ஏப்ரல் ஃபூல் பண்றீங்கனு நினைச்சோம்... கிராமத்தினர் அலட்சியத்தால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

பெங்களூரு: விளையாட்டாக எடுத்துக்கொண்ட விஷயம் ஒரு உயிரைப் பலியாக்கியுள்ள சம்பவம் ஹோசஹல்லி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

10. மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டியுடன் சிறப்பு நேர்காணல்!

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய உள் துறை இணை அமைச்சருமான கிஷண் ரெட்டியுடன் சென்னை செய்தியாளர்கள் குழுத் தலைவர் எம்.சி. ராஜன் நடத்திய சிறப்பு நேர்காணலை காணலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.