ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jun 24, 2021, 5:06 PM IST

1. பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்க்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2. 'போஸ்ட் கோவிட் கிளினிக்' - கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய திட்டம்

கரோனா தொற்று குறைந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரிகளிலும் போஸ்ட் கோவிட் கிளினிக் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

4. 2டிஜி மருந்தை விற்பனைக்கு கொண்டு வரக் கோரிய மனு - ஒன்றிய அரசு விளக்கமளிக்க உத்தரவு

கரோனா தொற்றை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட 2டிஜி மருந்தை விற்பனைக்கு கொண்டு வரக் கோரிய மனுவுக்கு நாளை (ஜுன் 25) ஒன்றிய அரசு விளக்கமளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. பாதி உடல் புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீட்பு!

சிந்த்வாரா மாவட்டத்தில் பாதி உடம்பு புதைக்கப்பட்ட நிலையிலிருந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு மீறிய உறவின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

இரண்டு நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்துவந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் 35 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

7. யூ டியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விருது: வித்தியாசமான சாதனையை படைத்துள்ள ’தப்பட்’ திரைப்படம்!

யூ டியூப் தளத்தில் அதிக முறை புகார் அளிக்கப்பட்டு நீக்கப்பட்டதற்காக ’தப்பட்’ திரைப்படம் ’கேன்ஸ் லயன்ஸ் சில்வர்’ விருதை வென்றுள்ளது.

8. கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆர்யா

நடிகர் ஆர்யா தனது முதல் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

9. எம்எஸ்வி, கண்ணதாசன் - போற்றிப் பாடிய கமல்ஹாசன்

திரு.கண்ணதாசன், திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அய்யாக்களுக்கு ஒரே நாள் பிறந்த தினமாய் அமைந்தது இன்னொரு அற்புதப் பொருத்தம் . இருவரும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல.. இந்தியாவின் பொக்கிஷங்கள் என கமல் குறிப்பிட்டுள்ளார்.

10. கால்பந்து மெஜிசியன் மெஸ்ஸிக்கு பிறந்தநாள்

நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி இன்று தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.