இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்தியில் மீண்டும் பெரும் பலத்தோடு பாஜக ஆட்சி வந்துள்ளது. இவர்கள் பெரும் முதலாளிகளோடு கைகோர்த்து பண பலம், ஊடக பலத்தை கொண்டு வன்முறைச் சக்திகளை ஏவி விட்டு மதவெறி, சாதி பாகுபாடு அரசியல் செய்ய வியூகங்களை வகுத்துள்ளன.
மேலும் மதச்சார்பின்மை, சமூகநீதி, சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று பராபட்சம் இல்லாமல் அனைத்து மனித உரிமைகளையும் காப்பதற்கு சீரிய செயல் திட்டங்களை வகுத்து, வழிநடத்திட வேண்டிய தருணம் ஒவ்வொரு நாளும் வந்து நம்மை நினைவூட்டுகிறது.
அதேபோல் திட்டமிட்டுப் பறிக்கப்படும் சமூகநீதி, மாநில உரிமைகள், மனித உரிமைகளை காக்க ஒத்தக் கருத்துள்ளவர்களை இந்திய அளவில் ஒன்றுதிரட்டி, ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும்' என அவர் குறிப்பிடபட்டுள்ளார்.